திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி…

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து தமிழகத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை அன்று முழுநேர ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு இரவுநேர ஊரடங்கு இன்று இரவு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து ஊரடங்கு நடைமுறைகளை முழுமையாக அமல்படுத்த போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

இதை தொடர்ந்து இன்று நடந்த திருச்சி மாநகராட்சி,காவல்துறை மற்றும் வியாபாரிகள் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *