திருச்சியில் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு

திருச்சியில் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜன.16 கடைசி நாள்!

தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள NIT இல் விரிவுரையாளர் பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

NIT வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள NIT இல் விரிவுரையாளர் பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகத்தில் திருச்சி NIT 9வது இடத்தில் இருந்து வருகிறது. இத்தகைய முன்னணி கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளர் பதவிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த பணிக்கான தகுதிகள் குறித்த விபரங்களை இந்த பதிவில் பின்வருமாறு காணலாம்.

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு. (trichyoutlook.com)

நிறுவனம்: திருச்சி NIT

பணி: விரிவுரையாளர்
காலியிடங்கள்: 22

துறை வாரியான காலியிடங்கள் விபரம்:

1. Architecture – 3

2. Civil Engineering – 6

3. Computer Science & Engineering – 4

4. Computer Applications – 5

5. Humanities & Social Sciences – 1

6. Metallurgical & Materials Engineering – 3

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினர்களுக்கு அதாவது SC/ST/OBC (Non-Creamy Layer)/PwD வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறைகளில் முனைவர் பட்டம் (Ph.D) பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.50,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணிக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க https://recruitment.nitt.edu/tmpfac22/ என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனை பிரிண்ட் எடுத்து தேவையான ஆவணங்களை இணைத்து The Registrar, National Institute of Technology, Tiruchirappalli – 620015, Tamil Nadu என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.01.2022

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 19.01.2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *