முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு.

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த K.T.ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டது.

இந்தப் புகார்களின் அடிப்டையில் கடந்த நவம்பர் மாதம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்தனர்.

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் போராட்டம் (trichyoutlook.com)

இந்த மோசடி வழக்கில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். ஆனால், அவரது முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார்.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவதற்கான பணிகளில் ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் நேற்று விருதுநகர் போலீசாரால் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் மதுரையில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணம் கருதி அவர் மதுரை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம் செய்ய சிறைத்துறை முடிவெடுத்து அதன்படி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *