குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த வழக்கறிஞர் கைது

திருச்சி மாநகரம் தென்னூரை சேர்ந்த பூபதி சஞ்சய் என்பவர் திருச்சி சாஸ்திரி சாலையில் அழகு நிலையம் வைத்துள்ளார். கடந்த மாதம் 28 ஆம் தேதி மாலை தனது மனைவியுடன் அழகு நிலையத்தில் பணியில் இருந்த போது திடீரென அழகு நிலையத்திற்குள் புகுந்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த நான்கு செல்போன்களை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து பூபதி தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் சக்திவேல், காளிதாஸ், அங்குராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த இவ்வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் வெங்கடேஷ் பெருமாளை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று தலைமறைவாக இருந்த வெங்கடேஷ் பெருமாளை காவல் துறையினர் கைது செய்தனர்.

‘உலகெங்கும் பேரபாயத்தை ஏற்படுத்தலாம்..’ வேக்சினில் இருந்து தப்புமா ஓமிக்ரான்? WHO முக்கிய விளக்கம் (trichyoutlook.com)

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *