திருமணம், நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்ய சங்கத்தை சேர்ந்தவர்களுக்கே ஒப்பந்தம் வழங்க வேண்டும் திருச்சி வீடியோ புகைப்பட நலக்கூட்டமைப்பினர் முடிவு

திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் புகைப்பட நலக் கூட்டமைப்பினர் இன்று திருச்சி மாநகரம் முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிரடியாக போஸ்டர்கள் மூலம் ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த போஸ்டரில் திருமணம் மற்றும் இல்ல விசேஷங்களுக்கு வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க வேண்டுமென்றால் சங்கத்தில் உறுப்பினர்களாக பதிவு பெற்றவர்களிடம் மட்டுமே உங்கள் நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தம் செய்யுங்கள் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு நீங்கள் அந்த வாய்ப்பை வழங்கி ஏமாறாதீர்கள் என்று ஒரு அதிரடி போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்கள் பேட்டியளித்த சங்கத்தின் ஆலோசகர் வீரமணி தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து புகார் வந்து கொண்டே இருக்கிறது. அந்த புகாரியில் போட்டோ வீடியோ எடுத்து விட்டு அதற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு உரிய முறையில் தருவதில்லை என தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளோம். அதில் வீடியோ போட்டோ ஆர்டர் கொடுப்பார்கள் தயவுசெய்து சங்கத்தில் பதிவு செய்யப்பட்டவர்ளுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *