திருச்சி காந்தி மார்க்கெட் டீ கடையில் தீ விபத்து….

திருச்சி காந்தி மார்க்கெட் முன்புறம் உள்ள டீ கடையில் இன்று காலை கேஸ் சிலிண்டர் வெடித்து திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக கடையில் உள்ளவர்கள் அனைவரும் வெளியேறினர். தீ மளமளவென எரிந்து அருகில் உள்ள கடைகளிலும் தீ வேகமாக பரவியது.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

மேலும், அங்கிருந்த ரோந்து போலீசார் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அத்துடன் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக கண்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்து தீயை அணைத்தனர். இதில் நான்கு கடைகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

மேலும்,தீ விபத்து குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலை நேரம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காந்தி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்க வந்த மக்கள் கூட்டம் அதிகரித்திருந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டது, அதேநேரம் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

இதில் காயமடைந்த டீக்கடை மாஸ்டர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *