SDPI கட்சி கேரளா செயலாளர் படுகொலை திருச்சியில் ஆர்ப்பாட்டம்

 

எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் K.S. ஷான் அவர்கள் எர்ணாகுளத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னாடி வந்த கார் ஒன்று அவரை இடித்து தள்ளிவிட்டு அந்த காரில் இருந்த RSS கயவர்கள் அவரை சரமாரியாக 40 இடங்களுக்கு மேலாக வெட்டிக் தப்பிச் சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட K.S. ஷான் அவர்கள் மருத்துவ சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 12 மணியளவில் மரணம் அடைந்தார்.

இந்த படுகொலையை கண்டித்து இந்தியா முழுவதும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களும், சாலை மறியல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதையோட்டி திருச்சி  SDPI கட்சி தெற்கு மாவட்டம் சார்பாக இன்று திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகில் மாவட்ட பொதுச்செயலாளர் தமிம் அன்சாரி அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பெண்களும் கலந்து கொண்டு தனது கண்டனங்களை பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *