‘உலகெங்கும் பேரபாயத்தை ஏற்படுத்தலாம்..’ வேக்சினில் இருந்து தப்புமா ஓமிக்ரான்? WHO முக்கிய விளக்கம்

ஜெனீவா: ஓமிக்ரான் கொரோனா சுமார் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ள நிலையில், அது பேரபாயத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் வேக்சினில் இருந்து தப்ப வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகையே கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தான் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா பெருந்தொற்றால் உயிரிழப்புகள் ஒரு புறம் என்றால் பொருளாதார இழப்புகளும் வாட்டி வதைத்தது.கொரோனா வேக்சின் கண்டறியப்பட்ட பிறகு தான் உலகம் மெல்ல இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருந்தது. இந்தச் சூழலில் கடந்த நவ.25இல் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.ஓமிக்ரான் கொரோனா தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த ஓமிக்ரான் பாதிப்பு ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இது மற்ற உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் அதிக மாற்றங்களைக் கொண்டிருப்பதால் ஆய்வாளர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், எங்கு இந்த உருமாறிய கொரோனா வைரசுக்கு வேக்சினில் இருந்து தப்பும் ஆற்றல் இருக்குமோ என்றும் ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். அதேநேரம் தென் ஆப்பிரிக்க மருத்துவர்கள் இந்த ஒமிக்ரான் லேசான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்துவதாகக் கூறி வருகின்றனர்,60க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தச் சூழலில் ஓமிக்ரான் குறித்து உலக சுகாதார அமைப்பு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், ’60க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள ஓமிக்ரான் சர்வதேச அளவில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது வேக்சின் அளிக்கும் தடுப்பாற்றல் இருந்து தப்பும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம்.அபாயம் உள்ளது

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

ஆனால், அவை லேசான பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது. கடந்த மாதம் தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங்கில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரானில் உள்ள மாற்றங்கள் அது மிக வேகமாகப் பரவும் சூழலை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக கொரோனா கேஸ்கள் அதிகரிக்கலாம். பல்வேறு காரணங்களால் ஒமிக்ரான் வகை ஒட்டுமொத்த ஆபத்தை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

ஆற்றல் அடுத்து வேக்சின் அளிக்கும் தடுப்பாற்றலில் இருந்தும் கூட தப்பும் திறனை இது கொண்டிருக்கலாம். இது மோசமான பாதிப்புகளுடன் கொரோனா பரவலை அதிகரிக்கக் காரணமாக அமையலாம். அதேபோல தென் ஆப்பிரிக்காவில் ஏற்கனவே கொரோனாவில் இருந்து குணமடைவோருக்கும் மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்படுவதையும் கண்டறிய முடிகிறது.

ஏன் ஆபத்தானது இது தொடர்பாக ஆய்வு செய்ய நமக்கு இன்னும் கூடுதல் தரவுகள் தேவை. டெல்டா கொரோனாவை காட்டிலும் தீவிரம் குறைந்து இருந்தாலும் கூட, வேகமாகப் பரவும் திறன் கொண்டிருப்பதால் இது மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். இது நமது சுகாதார அமைப்புகளில் கூடுதல் சுமையை ஏற்படுத்தி, உயிரிழப்புகளை அதிகரிக்கலாம். வரும் காலங்களில் இது குறித்துக் கூடுதல் தகவல்கள் தெரிய வரும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *