திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் தண்ணீரில் மிதக்கும் அரசு பள்ளி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட  இனாம் மாத்தூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்று தண்ணீரில் மிதக்கும் அளவிற்குக் குளமாக காட்சியளிக்கிறது. பள்ளி கட்டடங்கள் குறித்து சோதனை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு பள்ளியே ஆபத்தான நிலையில் நீர்நிலையாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஒருமாத காலமாக இப்படி நீர் தேங்கியிருப்பதால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு வகுப்புகள் நடைபெறுவதாகத் தெரிகிறது. மேலும், அந்தப் பள்ளியே குளம் இருந்த இடத்தில் கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது. 2006 – 2008 ஆண்டுகளில் இந்தப் பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டு 2012ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. பள்ளி வளாகத்தில் இப்படி குளம்போல நீர் தேங்குவதால் வகுப்புகள் எடுக்கச் சிரமமாக உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

“அந்தப் பள்ளியில் எந்த வகுப்பும் நடத்தக் கூடாது என்று தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தல் கொடுத்துள்ளோம். இன்று மாலைக்குள் நீர் வெளியேற்றப்படும். மோட்டர் வைத்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொஞ்சம் நில ஆக்கிரமிப்பும் இருந்தது. இன்று மாலைக்குள் நீர் வெளியேற்றப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *