தி.மு.க அரசை கண்டித்து திருச்சியில் அ.தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைப்பது, அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகை அளிப்பது, வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பில்   ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பாக திருச்சியில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500  க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்..முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பரஞ்சோதி, மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று கண்டன உரை ஆற்றினர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *