திருச்சியில் 2500 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் – ரூபாய் 200 கோடி வர்த்தகம் பாதிப்பு

 

மத்திய அரசு லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்து நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதா நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வங்கி ஊழியர் சங்கத்தினர் நாடு முழுவதும்
2நாள் பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

திருச்சி பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் முன்பு இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் வங்கி ஊழியர் சங்கத்தினர், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட 2500 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
வேலை நிறுத்த போராட்டத்தால் 200 கோடி வர்த்தகம் பாதிப்பு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *