போராட்ட அறிவிப்பால் ஆழ்வார்த்தோப்பு “ஓ” பாலம் சீரமைப்பு பணி தொடங்கியது

திருச்சி பாலக்கரையிலிருந்து ஆழ்வார்தோப்புக்கு செல்வதற்கு ஒரு “ஓ” பாலம் உள்ளது. இந்த சிறிய பாலத்தின் வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆழ்வார்தோப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பள்ளி.கல்லூரி மாணவ மாணவிகள் இந்த வழியாகத்தான் பாலக்கரை மீண்டும் செல்ல வேண்டும். கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக ஆழ்வார்தோப்பு “ஓ” பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றது இதனால் பாலத்தின் மேற்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று வந்தனர்.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் மழை நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் நொண்டி அடிக்கும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அறிவித்து இருந்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி உறுதி அளித்ததனர்.
இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. பாலத்தின் அடியில் மழைநீர் தேங்காமல் இருக்க பணிகள் நடைபெற்று வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *