கஞ்சா விற்பனை செய்த 13 நபர்கள் மீது குண்டர் திருச்சி மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த 13 நபர்கள் மீது குண்டர்

திருச்சி மாநகர பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் விதமாக பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் விதமாக மாநகர பகுதியில் ரோந்து செய்தும், தீவிர வாகன தணிக்கை செய்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது..
கடந்த 2020 ஆம் வருடம் திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்த 137 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வருடம் திருச்சியில் கஞ்சா விற்பனை செய்வோர் மீது 186 வழக்குகளில் 260 குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த குற்ற சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்ட வந்த 13 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *