குடிநீர் தொட்டியில் சாக்கடை நீர் திருச்சி பீமநகர் 48 வது வார்டு அவலநிலை….!!!

திருச்சி பீமநகர் (பழைய எண் 48 புதிய எண்) 51வது வார்டு கீழக்கொசத்தெருவில் குடிநீர் தொட்டியில் சாக்கடை கழிவு நிரம்பி இருக்கிறது . அப்பகுதி மக்களுக்கு குடிநீர் பிடிப்பதற்கு மிக சிரமமாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. திருச்சி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த கழிவு நீரை நீக்கி குடிநீர் குழாயை மேல் மட்டத்திற்கு வைத்து அந்ந தொட்டியை மூடி தரவேண்டும். இதனால் டெங்கு மலேரியா போன்ற நோயிலிருந்து பாதுகாக்க மாநகராட்சி இதனை உடனடியாக சீர் செய்து தர வேண்டும்.

இதனால் அந்த பகுதி மக்களுக்கு  நோய் ஏற்படும் அபாயம் உள்ளது..திருச்சி மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *