திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தெலுங்கானா முதல்வர் சாமி தரிசனம். நாளை தமிழக முதல்வரை சந்திக்க திட்டம்

 

தமிழ்நாடு முதலமைச்சரை நாளை சந்திக்க உள்ளேன் – ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்த பின்பு தெலுங்கானா முதலமைச்சர் பேட்டி.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் இன்று தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

முன்னதாக கோவிலுக்கு வந்த தெலுங்கான் முதலமைச்சரை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு,
மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்டோர் வரவேற்றனர்.பின்
கோவில் யானையிடம் சந்திரசேகர ராவ் ஆசி பெற்றார்.

அதன் பின்பு மூலவர் ரங்கநாதர் , ரங்க நாச்சியார் உள்ளிட்டோரை வழிபாடு செய்தார்.

ரங்கநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் பேட்டியளித்த சந்திரசேகர ராவ்,

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இரண்டாவது முறை வந்துள்ளேன்,மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
கோவிலை சிறப்பாக பராமரித்து வருகிறார்கள்,அதற்கு தமிழக அரசுக்கு நன்றி.

தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறை தமிழ்நாடு வந்துள்ளேன் – நாளை மாலை சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரை நேரில் சந்திக்க உள்ளேன் என்றார்.

முன்னதாக தெலங்கானா முதல்வரின் வருகையை ஒட்டி ஸ்ரீரங்கம் பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *