எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன்ஸ் அசோசியேசன் வலியுறுத்தல்.

தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன்ஸ் அசோசியேசன் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

திருச்சியில்ஹநடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் பெஞ்சமின் தலைமை வகித்தார்.

மாநிலச் செயலாளர் மாசிலாமணி, மாநில பொருளாளர் ராஜசேகர், மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழக அரசு எலக்ட்ரானிக் சார்ந்த தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். அரசு சார்ந்த பணிகளை அனைத்து தொழிலாளர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கான ஏற்பாடு கிழக்கு மண்டலம் திருச்சி மாவட்டம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

திருச்சி டயர் மாவட்டத் தலைவர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் சுகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் கமருதீன், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் நிவாஸ் குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *