பாபர் மசூதி இடிப்பு தினம் திருச்சி த.மு.மு.க வினர் ஆர்ப்பாட்டம்

அயோத்தியில் பாபரி மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டதை கண்டித்தும், பாபர் மசூதி இடத்தை மீண்டும் முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியும், மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரி இந்தியா முழுவதும் இன்று பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகில்
மாவட்ட பொது
முகம்துராஜா
தலைமையில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் மைதீன்கான், திருச்சி ஜமாத்துல் உலமா சபையின் மாநகரச் செயலாளர் முகம்மது சிராஜுதீன் மன்பயி
ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில்
தவறான நீதியால் வழங்கப்பட்ட பாபரி மஸ்ஜித் இடத்தை மீண்டும் இஸ்லாமிற்கு கொடுக்க வேண்டும் மீண்டும் அதே இடத்தில் பாபர் மஸ்ஜித் கட்டப்பட வேண்டும், மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் என வலியுறுத்தி
கோஷமிட்டனர். இதில் நிர்வாகிகள் இப்ராஹிம், பைல்அகமது, அஷ்ரப்அலி,
ஹீமாயின்
பெண்கள், குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்கள் பேட்டியளித்த மாநில செயலாளர் மைதீன்கான்

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு குற்றவாளிகள் என்று அத்வானி முதல் உமாபாரதி வரை 60 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் தீர்ப்பில் நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் தீர்ப்பு அளிக்கிறோம் என்று கூறுகிறார். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. உச்ச நீதிமன்றம் தானாக இந்த வழக்கை எடுத்து நடத்தி என்ற இடத்தை மீண்டும் பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *