பாபர் மசூதி இடித்ததை கண்டித்து SDPI கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடித்ததை கண்டித்தும், மசூதியை இடித்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும், பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பாலக்கரை ராவுண்டானா அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், எஸ்.டி.பி.ஐ வடக்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, மாவட்ட செயலாளர் அப்துல் மஜீத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் சபியுல்லா மற்றும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *