மதுரம் அறக்கட்டளை மக்கள் மறுவாழ்வு திட்டம் 3-ம் ஆண்டு தொடக்க விழா.

மதுரம் அறக்கட்டளையின் மக்கள் மறுவாழ்வு திட்டம் 3 ஆம் ஆண்டு தொடக்கவிழா திருச்சியில் நடைபெற்றது.

மக்கள் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு சேவை என கடந்த 140 வருட பாரம்பரியம்மிக்க வரலாற்று பெருமையை மதுரம் மருத்துவமனை பெற்றுள்ளது. உலக பிரசத்திபெற்ற மதுரம்ஸ் குரு தைலம் இதன் மகுடம் ஆகும்.

திருச்சி நகரசபையின் முதல் சேர்மன் மற்றும் 1954ல் திருச்சியின் முதல் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமை டாக்டர் மதுரம் அவர்கள் பற்றிய கல்வெட்டுகள் இன்றும் பல இடங்களில் காணப்படுகிறது.

திருச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பல பள்ளிகள், இடங்கள் அவர்கள் தானமாக கொடுத்தது என்பது வரலாற்று உண்மை.

அந்த தலைமுறையின் அடிச்சுவட்டின் அடையாளமாக டாக்டர் சாமுவேல் எ. மதுரம் அவர்களின் ஒரே மகன் டாக்டர் ஐவன் மதுரம் மற்றும் அவரது துணைவியார் டாக்டர் ஷர்மிலி மதுரம் அவர்களின் அயராத முயற்சியால் மதுரம் சுகாதாரம், கல்வி மற்றும் சேவா அறக்கட்டளை 2017ல் தொடங்கப்பட்டு இன்றுவரை சுயதொழில் இழந்து வாடும் ஏழை மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் உயிரோட்டமாக செய்யப்பட்டு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *