குழந்தைக்கும் எனக்கும் பாதுகாப்பு வேண்டும் ; திருச்சி கோட்டை காவல் நிலையம் முன்பு பெண் தர்ணா.

 

திருச்சி ஈபி ரோடு சத்திய மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் திவ்யா(31).இவர் ஞானசேகர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதன் காரணமாக அவர் கர்ப்பமாகி உள்ளார். 6 மாத கர்ப்பிணியான திவ்யாவை ஞானசேகர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் அவர் வயிற்றில் வளரும் குழந்தையை கலைக்க முடிவு செய்துள்ளனர் 6 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது என கூறி குழந்தையை கலைக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது, பின்பு ஞானசேகரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், ஞானசேகருக்கு அவரது குடும்பத்தினர் வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், வௌியில்
சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி, கணவரை மறைத்து வைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து திவ்யா பலமுறை கொடுத்த புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி இன்று கோட்டை மகளிர் காவல் நிலையம் முன்பு அவர் குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் அவருடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்திய மகளிர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வழக்கு பதியப்படும் என்று உறுதி அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *