ரூபாய் 200 கோடி ஊழல் – திருச்சி TELC பேராயர் மீது நிர்வாகக் குழுவினர் குற்றச்சாட்டு

 

ரூபாய் 200 கோடி ஊழல் செய்துவிட்டதாக டி.இ.எல்.சி யில் நிர்வாகத்தில் புதிதாக பதவியேற்ற செயலாளர் மார்க்அண்டனி செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்
திருச்சியை தலைமை இடமாக கொண்டு தமிழ்நாடு சுவிசேஷ லுத்தரன் திருச்சபை செயல்பட்டு வருகிறது. இந்த திருச்சபையின் கீழ்
2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட திருச்சபை மக்கள் உள்ளனர். திருச்சபையின் கீழ் 200 பள்ளிகள், ஒரு கல்லூரி, மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. சுமார் 300 ஆண்டு காலமாக பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறோம்.

இந்நிலையில் 13-வது பேராயராக செயல்பட்டு வந்த டேனியல் ஜெபராஜ்
தனது பதவிக்காலம் முடிந்த பின்னரும் தன்னிச்சையாக தனது பதவியை நீட்டித்து ஒரு இத்தீர்மானத்தை ஏற்படுத்தி பேராக செயல்பட்டு வந்தார். மேலும் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த நிர்வாக ஆலோசனைக் குழுவையும் கலைத்துவிட்டு தன்னிச்சையாக செயல்பட்டு வந்தார். இது தொடர்பாக நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றுள்ளோம். எனவே பேராயர் எந்தவிதமான நிர்வாக செயல்பாட்டிலும் செயல்பட முடியாது.
மேலும் பேராயர் டேனியல் ஜெபராஜ் தன் பதவி காலத்தில் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹேமாதேவி என்பவருக்கு தஞ்சை கிறிஸ்தவ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 34 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவரை கிறிஸ்தவராக மதம் மாற்றி ஆசிரியராக பணி அமர்த்தியுள்ளார். மேற்கொண்டு வெளிநாடுகளில் இருந்து திருச்சபை மக்களுக்கு உதவி செய்ய வரக்கூடிய உதவி தொகை கையாடல் செய்துள்ளார். குறிப்பாக ரூபாய்
200கோடி அளவில் ஊழல் ஈடுபட்டுள்ளார் இது தொடர்பாக நீதிமன்றம் சென்று வழக்கு கொடுக்க உள்ளோம். மேலும் விரைவில் 14ஆவது பேராயர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *