மாவட்ட தடகள போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது

திருச்சி மாவட்ட தடகள சங்கம், நீயூரோ ஒன் ,ஆப்பிள் மில்லட் குழுமங்கள் இணைந்து நடத்தும் இளையோருக்கான (இருபாலர்) ஸ்டேட் பாங்க் எஸ்.மோகன் நினைவு சுழற் கோப்பை – 2021 என்ற பெயரில் மாவட்ட தடகள போட்டிகள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது

ஸ்டேட் பாங்க் எஸ்.மோகன் , குழுமமும் இணைந்து வயது 12 ,14,16,18 & 20க்கும் கீழ் ஆகிய பிரிவுகளில் சீறும் சிறப்புமாக 28.11.2021 மற்றும் 29.11.2021 ஆகிய தேதிகளில் இருபாலருக்குமான தடகள போட்டிகள் திருச்சி அண்ணா செயற்கை ஒடுதள விளையாட்டரங்கில் நடைபெற்றது.

28.11. 21 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜூ தலைமையிலும் ,

திருச்சி மாவட்ட தடகள சங்க பொருளாளர் ச.ரவிசங்கர், இணைச் செயலாளர் சுதமதி ரவிசங்கர் ,ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு, உதவிச்செயலாளர் கனகராஜ், முனைவர் ஹரிஹர ராமச்சந்திரன், கே.சி. நீலமேகம், ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

29.11.21 திங்கள்கிழமை இரண்டாம் நாள் போட்டிகள் முடிந்து பரிசளிப்பு விழாவிற்கு திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு தலைமையிலும் , தடகள சங்க பொருளாளர் ச.ரவிசங்கர் , ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பாபு, மக்கள் தொடர்பு கே.சி. நீலமேகம் , கனகராஜ் , சங்கர், ஆகியோர் முன்னிலை நடந்தது.

தடகள இணைச் செயலாளர் திருமதி. முனைவர் சுதமதி ரவிசங்கர்வரவேற்புரை ஆற்றினார்.

ஆப்பிள் மில்லட் வீர சக்தி, நியூரோ ஒன் மருத்துவமனை டாக்டர் எஸ்.விஜயகுமார், TSP 1 BN commandant of Police எம். ஆனந்தன் , மாநில வலைபந்து கழக செயலாளர் ராஜ்திரு, ஆகியோர் வெற்றி பெற்றவருக்கு அனைவருக்கும் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.

ஒட்டு மொத்த குழு ஆண்கள் பிரிவின் பதக்கங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *