திருச்சி பொன்மலை ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தரைக்கடை வியாபாரிகளுக்கு அனுமதி கோரியும் ஆர்ப்பாட்டம்

 

40 வருடமாக பொன்மலை இரயில்வே ஆர்மரிகேட் தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு தடை விதிப்பது

ரயில்வே கேண்டீன் முதலாளி லாபம் பார்ப்பதற்காக தரைக்கடை வியாபாரிகளை அனுமதிக்காமல் இருப்பதும் மீண்டும் ஆர்மரிகேட்டில் தரைக்கடை தள்ளுவண்டி கடை நடத்த அனுமதி கோரி

பொன்மலை ரெயில்வே கேண்டீன் எதிரில் ரெயில்வே மருத்துவமனை முன்பு திருச்சி மாவட்ட தள்ளுவண்டி தரைக்கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அச்சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. நாளை திட்டமிட்டபடி கடைகளை வைத்து வியாபாரம் செய்வோம் அவற்றை தடுத்தால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் அப்பகுதி தரைக்கடை வியாபாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *