திருச்சி மத்தியபேருந்து நிலைய பகுதியில் சாலையில் ஓடும் கழிவுநீரை சரிசெய்ய கோரிக்கை

திருச்சி மத்திய பேருந்து நிலையம் சுற்றிலும் சாக்கடையுடன் கலந்து வரும் கழிவுநீரை நிரந்தரமாக சரிசெய்யவில்லை என்றால் போராட்டமும் பஸ் மறியலில் ஈடுபட தயாராக உள்ளோம் இந்திய குடியரசு கட்சியின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து கழிவுநீர்
வெளியேறி வருகிறது,

திருச்சி மாநகராட்சி கழிவுநீர் சாலைகளில் நிரம்பி ஓடும் வேளையில் மட்டும் கழிவு நீர்களை வெளியே வராமல் சரி செய்வது போல் தற்காலிகமாக மட்டுமே கழிவு நீர் வெளியேற்றத்தை சரி செய்து விட்டு சென்றுவிடுவார்கள்,

ஆனால் இந்தப் பகுதியில் அடுத்த சில வாரங்களில் மீண்டும் சாக்கடைநீர் வெளியேறி வரும் .

மழை காலம் என்றால் அதிகப்படியான மனிதக் கழிவுகள் வெளியேறி இப்பகுதியில் சாக்கடை நீர் குளம் போன்று காட்சியளிக்கும்.

தினமும் பல்லாயிரக்கணக்கானோர் மத்திய பேருந்து நிலையத்திற்கு வரும் மக்கள் மற்றும் இங்கு உள்ள வியாபாரிகள் இந்த வழியாக வந்து செல்லும் உயரதிகாரிகள் என அனைவரும் முகம் சுளிக்கும் அளவிற்கு இந்தப் பகுதி மோசமான நிலையில் உள்ளது,

நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது ,

திருச்சி மாநகராட்சிஅதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தாலும் இதனை நிரந்தரமாக சரிசெய்ய நினைப்பதே இல்லை.

இதனை சரி செய்வதற்கு ஆகும் செலவினை சுருட்டு வதிலும் மற்றும் அவர்கள் மாத சம்பளத்தை வாங்கி பாக்கெட்டில் வைப்பதை மட்டும் குறியாக வைத்துக்கொண்டு பணியாற்றுகிறார்கள்.

தமிழகத்தில் பல பகுதியிலிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு வரும் மக்களின் நலன் கருத்தி செயல்படுவது இல்லை என இந்திய குடியரசு கட்சியின் திருச்சி மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

அத்துடன் மாநகராட்சி சாக்கடையுடன் கலந்து கழிவுநீர் வெளியேற்றத்தை நிரந்தரமாக சரிசெய்யவில்லை என்றால் அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஒன்று சேர்ந்து இந்த பகுதியில் போராட்டங்களும்,
பஸ் மறியலில் ஈடுபட தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *