வ.உ.சி நினைவு நாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் – மாலை அணிவித்து மரியாதை.

 

சுதந்திரப் போராட்ட வீரரும் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 85வது நினைவு நாளை முன்னிட்டு
தமிழகம் முழுவதும் அவரது உருவச் சிலைக்கு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக திருச்சியில் நீதிமன்றம் அருகில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், கோவிந்தராஜன், பகுதி கழக செயலாளர்கள் மதிவாணன், மணிவேல், மோகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கிளை கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *