பாபர் மசூதி இடத்தை மீட்க மாபெரும் பிரச்சாரம் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா முடிவு

 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில மற்றும் மாவட்ட தலைவர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி மாநிலத் தலைவர் முகமது ஷேக் அன்சாரி தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய தலைவர் சலாம் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் முகமது அலி ஜின்னா இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து செய்தியாளர் பேட்டி அளித்த மாநில தலைவர் முகமதுஷேக்அன்சாரி

நாடு சுதந்திரமடைந்து
75 ஆண்டுகால விழாவை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சுதந்திர தின போராட்ட தியாகிகளை நினைவு கூறும் விதமாக அவரின் தியாகத்தை போற்றும் விதமாக ஒரு வருட பிரச்சாரத்தை தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்வது.
இதில் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட இஸ்லாமியர்களின் தியாகத்தை கொண்டு செல்வது,

அதிகார பலத்தை கொண்டு சிறுபான்மையினர் நம்பிக்கை கொண்டிருக்கும் அந்த நம்பிக்கையை தகர்க்கும் வகையில்
1992ல் ஒட்டுமொத்த உலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த பொழுது நாட்டிற்கு தலை குனிவை ஏற்படுத்தும் விதமாக இஸ்லாமியர் 450 வருடகாலம் தொழுகை நடத்தி வந்த இடம் தகர்க்கப்பட்டது.
இஸ்லாமிய சட்டப் போராட்டம் நடத்தினர். முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
அநீதியான தீர்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது இஸ்லாமியர்களுக்கு ஆதாரம் இருந்தும், வேறு ஆவணங்கள் இருந்த நிலையிலும் நீதிமன்றத்தை அணுகியும்,
ஒட்டுமொத்த அரசும் சரி, நீதிமன்றமும் சரி பாரபட்சமான ஒரு தீர்ப்பை ஒரு அநீதியான தீர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். எந்தவித ஆதாரமும் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையிலேயே எங்களுக்கு சொந்தம் என கூறி இடித்த அந்த இடத்தை நீதிமன்றம் அந்த குண்டர்களிடமே கொடுத்திருக்கிறது. இது அநியாயமான தீர்ப்பு. இந்த தீர்ப்பை கண்டித்தும் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி தமிழகம் முழுவதும் பாபர் மசூதி திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும், பாபர் மசூதி மீட்புப் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *