நேரு யுவகேந்திரா நிறுவன நாள் மற்றும் குழந்தைகள் தின விழா.எஸ்ஆர்எம் பேச்சு பயிற்சி மற்றும் இந்திய சிலம்ப கோர்வை சார்பில் நடைபெற்றது

நேரு யுவகேந்திரா நிறுவன நாள் மற்றும் குழந்தைகள் தின விழா.எஸ்ஆர்எம் பேச்சு பயிற்சி மற்றும் இந்திய சிலம்ப கோர்வை சார்பில் நடைபெற்றத

நேரு யுவ கேந்திரா நிறுவன நாள் மற்றும் குழந்தைகள் தின விழா திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் பள்ளியில் நேரு யுவ கேந்திரா, உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம், எம்.ஆர்.எம். பேச்சு பயிற்சி மற்றும் இந்திய சிலம்ப கோர்வை சங்கத்தின் சார்பில் இன்று கொண்டாட பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவமனை இயக்குநர் டாக்டர். வி.ஜெயபால் அவர்கள் கலந்து கொண்டு உலக சிலம்ப இளைஞர் சம்மேளன சிலம்ப மாணவர்களின் சிலம்பாட்டத்தை பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.

மேலும் திருச்சியில் குழந்தைகளின் திறன் மேம்பாட்டிற்காக பாடுபட்டு வரும் ஊனையூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சை.சற்குணன், எடமலைபட்டி புதூர் உதவி தலைமை ஆசிரியர். லதா பாலாஜி, கலைக்காவிரி பேராசிரியர் சதீஷ்குமார், மூத்த சிலம்ப ஆசான் எம்.ஜெயக்குமார் மற்றும் இளம் சிலம்ப சாதனை நாயகி மோ.பி.சுகித்தா ஆகியோருக்கு ஒளிரும் மின்மினி விருதினை டாக்டர் வி.ஜெயபால் அவர்கள் வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *