திருச்சியில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆய்வு

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடர்ந்து செய்து வருவதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது திருச்சியில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக குழுமணி சாலையில் இருக்கக்கூடிய லிங்க நகர் ,மங்கலம் நகர், செல்வ நகர், உறையூர் ஆகிய பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.கோரையாறு ஆற்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதன் அருகே இருக்கக்கூடிய கருமண்டபம், எடமலைப்பட்டிபுதூர் ஆகிய பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது திருச்சி விமான நிலையம் அருகே இருக்கக்கூடிய ஜே கே நகர் பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்தது  மழை நீர் வடிவதற்கு  மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அதிகாரிகள்  மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *