சவுதியில் இறந்தவரின் உடல் எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் இந்தியன் சோசியல் ஃபோரம் உதவியால் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு.

  1. இராமாநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த ராமர் (35) என்பவர் சவுதி அரேபியா ஜீபைல் என்ற பகுதியில் மீன்பிடி தொழிலுக்காக பணிபுரிந்து வந்த இந்த நிலையில் 04/9/2021 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருடைய மனைவி கலைநிவேதிகா மற்றும் அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

அவருடைய உறவினர்கள் உடலை பெற்று தரவேண்டி எஸ்.டி.பி.ஐ கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டனர். உடனே ஜீபைல் பகுதியை
சேர்ந்த இந்தியன் சோஷியல் ஃபோரம் (ISF) நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர்.

சோஷியல் ஃபோரம் எடுத்த தொடர் முயற்சியின் பலனாகவும் இந்திய தூதரகத்தின் உதவியினாலும் இறந்த ராமர் உடலை இந்திய தாயகத்திற்கு 2021 நவம்பர் 09ஆம் தேதி ஷிலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் திருச்சி விமான நிலையத்திற்கு காலை 10 மணியளவில் வந்தடைந்தது.

எஸ்.டி.பி.ஐ கட்சி கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி அவர்களின் தலைமையில் உடலை பெற்றோம். தெற்கு மாவட்ட பொதுசெயலாளர் நியமத்துல்லா அவர்களும், தெற்கு மாவட்ட செயலாளர் ஏர்போர்ட் மஜீத், பொருளாளர் சுஹைபு, திருவாடானை வடக்கு தொகுதி தலைவர் சலாமத் அலி, தொகுதி செயலாளர் ரிஸ்வான், சமூக ஊடக அணியின் மாவட்ட செயலாளர் முஜாஹிதீன்
ஆகியோர்கள் திருச்சி விமான நிலையம் சென்று அவருடைய உடலை பெற்று சொந்த ஊருக்கு எடுத்து செல்ல அனைத்து உதவிகளை செய்து எஸ்.டி.பி.ஐ ஆம்புலன்ஸ் மூலம் ஊருக்கு கொண்டு சென்று குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். குடும்பத்தார்கள் கண்ணீர்மல்க நன்றியினை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *