திருச்சி மாவட்டத்திற்கு வெள்ள அபாயம் இல்லை – திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி

 

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அமையும் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆய்வு மேற்கொண்டார்..,
அதன் பின்பு
திருச்சி முக்கொம்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…திருச்சி மாவட்டத்தில் 80 சதவிகிதம் ஏரிகளில் 75% நிரம்பி உள்ளது.கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றலாம் 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.மேட்டூர் அணையில் நாளை திறக்கக் கூடிய சூழல் உள்ளது.வெள்ள அபாயம் தற்பொழுது திருச்சி மாவட்டத்தில் இல்லை…மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது கொள்ளிடம் வழியாக வெளியேற்றப்படும்..

காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரித்தால் டெல்டா மாவட்டங்களை பாதிக்கும் என்பதால் கொள்ளிடத்தில் திறக்கப்படும் .

நஞ்சை நிலங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் தாழ்வான பகுதிகளில் இருந்து தண்ணீர் கோரையாற்றிற்கும் குடமுருட்டி ஆற்றிற்கும் செல்ல முடியவில்லை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *