திருச்சி SDPI கட்சி அனைத்து நிர்வாகிகள் கூட்டம்

 

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக புதிதாக மாநில செயற்குழு உறுப்பினரும்,திருச்சி மண்டல தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இமாம்.அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி அவர்களுக்கு பாராட்டும் நிகழ்வு மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி அவர்கள் தலைமையில் #நேற்று நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் மதர்.Y. ஜமால் முகமது அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இந்நகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட தலைவர் I. சபியுல்லா,SDPI கட்சி வடக்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி,வடக்கு மாவட்ட பொதுசெயலாளர் நியாமத்துல்லா ஆகியோர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட செயலாளர் ஏர்போர்ட்.மஜீத் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இதில் மாவட்ட நிர்வாகிகள்,தொகுதி நிர்வாகிகள்,அணி நிர்வாகிகள்,கிளை நிர்வாகிகள்,செயல்
வீரர்கள் என திரளாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இதில் மாவட்டத்தின் அடுத்த மூன்றாண்டு கால பணிகள் பற்றியும், மக்களின் சேவைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

இறுதியாக மாவட்ட பொருளாளர் சுஹைப் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *