AIM TO HIGH அமைப்பின் சார்பில் 120 ஏழைக் குழந்தைகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள்

 

முகநூல் மற்றும் வாட்ஸ்அப் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட எய்ம் டூ ஹை அமைப்பின் சார்பாக திருச்சி புத்தூர் முகூர்த்தம் திருமண மண்டபத்தில், டிரஸ்டின் நிறுவனர் இரா.மோகன்
தலைமையில் 120 க்கும் மேற்பட்ட ஏழை எளிய குழந்தைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை, இனிப்பு மற்றும் காரம் கொடுத்து அவர்களுடன் மதிய அசைவ உணவு உண்டு தீபாவளியை கொண்டாடினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி கிழக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்கள் கலந்து கொண்டு,
கொரோனா என்கிற கொடிய நோய் உலகெங்கும் பாதிக்கபட்ட நிலையில் இந்த வருட தீபாவளிக்கு புத்தாடை எடுக்ககூட வழி இல்லாத 120க்கும் மேற்பட்ட ஏழை எளிய குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் காரம் ஆகியன கொடுத்து சிறப்பித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *