திரிபுராவில் முஸ்லீம்கள் மீதான வன்முறை தாக்குதலை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

 

திரிபுராவில் கடந்த 10 நாட்களாக முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது தொடர் தாக்குதல், மற்றும் முதியவர், பெண்கள் முதல் குழந்தைகள் வரை மீதான மத அடிப்படையிலான தாக்குதல் என கடந்த நாட்களில் மதத்தின் பெயரால் சிலர் தாக்குதலை நடத்தி வருகின்னர். இதனால் முஸ்லிம்களின் சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த கலவர வன்முறை தாக்குதலை தடுத்து நிறுத்தாத திரிபுரா அரசின் செயலற்ற தன்மையை வன்மையாக கண்டிக்கும் விதமாக தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை எஸ்டிபிஐ கட்சி அறிவித்தது.

அதனடிப்படையில் இன்று 29-10-21 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான வன்முறை தாக்குதலை கண்டிக்கும் விதமாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாவட்ட பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஏர்போர்ட் மஜித் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் எஸ்டிபிஐ கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி அவர்களும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா அவர்களும், மேலும் திருவெறும்பூர் தொகுதி செயலாளர் சாகுல் ஹமீது இமாம் அவர்களும் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள். மாவட்ட துணைத்தலைவர் பிச்சைக்கனி அவர்களும், மாவட்ட செயலாளர் மதர் ஜமால் அவர்களும், மாவட்ட பொருளாளர் சுகைப் அவர்களும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்பாஸ் அவர்களும் முன்னிலை வகித்தனர்.

மேலும் மாவட்ட செய்தி தொடர்பாளர் பகுருதீன் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தொகுதி, கிளை நிர்வாகிகளும், பெண்களும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் என பலர் கலந்து கொண்டு கலவரத்தை தடுத்து நிறுத்தாத திரிபுரா மாநில அரசின் செயலற்ற தன்மையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *