ஏழு பேர் விடுதலை அரசியல் சட்டத்தின்படி நடக்கட்டும் – திருச்சி MP திருநாவுக்கரசர்

திருச்சிராப்பள்ளி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,

திருச்சியில் முடிக்கப்படாமல் உள்ள அரிஸ்டோ மேம்பால பணிக்காக பாதுகாப்பு துறைக்கு நிலம் ஒதுக்கும் பணிகள் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டது.விரைவில் பணி தொடங்கும்

பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசகர்.அவரின் தனிப்பட்ட கருத்தை அவர் கூறுகிறார்.

ராகுல் காந்திக்கு மோடியின் பலமும் தெரியும், பலவீனமும் தெரியும்.அகில இந்திய அளவில் மோடியை சமாளிக்க கூடிய,மோடியை வெற்றி பெறக்கூடிய ஒரே தலைவராக ராகுல் காந்தி தான் இருக்கிறார்.அதை காலம் விரைவில் நிரூபிக்கும்.புதிதாக யாரிடமும் சென்று பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ராகுல் காந்திக்கு இல்லை.

அரசியல் சட்டத்தின் படி ஆளுநர்களுக்கு சில எல்லைகள் உண்டு.அதன்படி செயல்படுவது தான் சரியானது.கடந்த காலங்களில் ஆளுநர்கள் அவ்வாறு தான் செயல்பட்டார்கள்.ஆனால்
மோடி அரசு வந்த பின்பு ஆளுநர்களை பயன்படுத்தி மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு சில தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிற்கு புதிதாக வந்துள்ள
ஆளுநர் தன்
எல்லைகளை உணர்ந்து செயல்படுவார் என எதுர்பார்க்கிறோம் அப்படி செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.அப்படி செயல்பட்டால் தான் அவருக்கும் நல்லது.

ஏழு பேர் விடுதலை அரசியல் சட்டத்தின்படி நடக்கட்டும் அதை தான் காங்கிரஸ் கூறுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *