நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆன்லைன் புகைப்பட வாக்காளர் பட்டியல்கள் தயார் செய்வது குறித்து பயிற்சி வகுப்பை திருச்சி மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆன்லைன் புகைப்பட வாக்காளர் பட்டியல்கள் தயார் செய்வது குறித்து மாநகராட்சியில் மைய அலுவலகத்தில்  இன்று (28.10.2021)  , மாநகராட்சி ஆணையர் திரு.ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் அவர்கள்  பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில்  உதவிஆணையர் திரு.ச.நா.சண்முகம்,  முதன்மை பயிற்றுநர் பயிற்சியாளர்களால் மாநகராட்சி அனைத்துக் கோட்ட உதவி வருவாய் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், வருவாய் ஆய்வர்கள், வருவாய் உதவியாளர்கள், தேர்தல் இருக்கை எழுத்தர்கள் மற்றும் அனைத்து புள்ளி விவரத் தொகுப்பாளர்களுக்கு ஆன்லைன் புகைப்பட வாக்காளர் பட்டியல்கள் தயார் செய்வது குறித்து பயிற்சி  அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *