விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் “போதை ஒழிப்பு பிரச்சாரம்”

விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்டம் சார்பாக “போதை ஒழிப்பு பிரச்சாரம்” ஆழ்வார்தோப்பில் காயிதேமில்லத் நகர் பகுதியில் விமன் இந்தியா மூவ்மெண்ட்டின் திருச்சி மாவட்ட தலைவர் மூமினா பேகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த பிரச்சாரத்திற்கு விமன் இந்தியா மூவ்மெண்ட்டின்
மாவட்ட பொதுச் செயலாளர் தௌலத் நிஷா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மேலும் போதையை ஒழிப்பதற்கான தீர்வு எது என விமன் இந்தியா மூவ்மெண்ட்டின் மாநிலப் பேச்சாளர் மெஹராஜ் பானு ஆலிமா அவர்கள் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் SDPI கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஏர்போட் மஜீத், WIM மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் S. சுபேரியா பானு, மேற்கு தொகுதி தலைவர் தளபதி அப்பாஸ், மேற்கு தொகுதி செயலாளர் முஹம்மது சலீம், வர்த்தகர் அணி மாவட்ட பொருளாளர் இரும்பு கடை முஸ்தபா, மற்றும் ஆழ்வார்தோப்பு கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *