சிறுபான்மையினர் மக்களின் நலனைக் காக்க சமத்துவ கல்லறை – சமத்துவ தகன மேடைகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும் – திருச்சியில் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

சிறுபான்மையினர் மக்களின் நலனைக் காக்க சமத்துவ கல்லறை – சமத்துவ தகன மேடைகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும் – திருச்சியில் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி …

திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் – இதில் பேசிய் அவர் :

சிறுபான்மை மக்களுக்கான வாழ்வியல் பிரச்சினைகள்,சவாலக்ள்,சிக்கல்கள்,அவர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள திட்டங்கள் போன்றவற்றிக்காக இந்த ஆணையம் உருவாக்கப்படுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்,சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சிறுபான்மையினர் மக்களுக்கான பிரச்சினைகளை ஆய்வு செய்து வருகிறோம்.

சிறுபான்மையினர் மக்கள் பல இடங்களில் நிம்மதியாக வழிபாடு செய்ய அவர்களால் முடியவில்லை – அவர்களுக்கு ஒரு சாரார் பிரச்சினைகளை கொடுத்து வருவது தெரிய வருகிறது.

சமூக அமைதி மிக முக்கியம் என்பது தான் உண்மை – கிருஷ்துவர்களை அடக்கம் செய்ய இடம் இல்லை,இது மிக பெரிய பிரச்சினையாக உள்ளது,தனியார் இடத்தை வாங்கி கல்லரையை ஏற்படுத்த முயன்றாலும் அதற்கு பலர் தடை செய்கின்றனர்.

தமிழகம் முழுவதும் சமத்துவ கல்லறை,சமத்துவ தகன மேடைகளை ஏற்படுத்த வேண்டும் ( இதை முதல்வரிடம் கோரிக்கையாக வைக்கிறோம் )

ஒன்றிய அரசின் சி.எஸ்.ஆர் நிதியை எப்படி செலவு செய்கின்றனர் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்.

பெட்ரோலிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது – இது ஏழைகளை தண்டிக்கும் செயல் என்பதில் மாற்றம் இல்லை.

கார்ப்ரேட் கட்டும் வரிகளை குறைத்து ஏழை எளிய மக்கள் மீது சுமத்துகிறது.

பெரும் வருமானம் உள்ளவர்களுக்கு இந்த மத்திய அரசு என்ன வரி விதிக்கிறது – செஸ் வரி வசூல் செய்யப்பட்டு அந்த பணம் எங்கே செல்கிறது.

உத்திர பிரதேசம் போன்ற பல வட மாநிலங்களில் விமானம் வந்து இறங்கும் அளவிற்கு சாலைகள் உள்ளது – ஏன் தென் மாநிலத்தில் இது போன்ற திட்டம் இல்லை.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை என்ன ? தமிழகத்தில் ராணுவ தளவாடங்கள் கொண்டு வரப்படும் என்று கூறினார்கள் – அதன் நிலை என்ன ?

ஆளுநர்க்கு விவரங்கள் அனுப்ப வேண்டும் என்று தலைமை செயலாளர் கடிதம் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு ? முதல்வர் மூலமாக தான் இது நடைபெற்றுள்ளது – திமுக செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

பா.ஜ.கவின் மீது கை வைத்து பார் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறி உள்ளது ? இது மல்யுத்த போட்டியோ … குழாய் அடி சண்டையோ அல்ல .. ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைவராக அண்ணாமலை நடந்து கொள்ள வேண்டும்.

மறைமுக வரியை குறைக்க வேண்டும் – டீசல் விலை அடுத்த ஆறு மாதத்தில் பூதகரமாக வெடிக்கும்.

7 பேர் விடுதலை மட்டும் அல்ல – அதை மட்டும் ஏன் கேட்க வேண்டும்… 25 ஆண்டுகள் சிறையில் உள்ளவர்கள் போன்ற அளவீட்டை அரசு எடுத்து… எல்லோரையும் விடுதலை செய்யட்டும்.

நீதிமன்றமும் – அரசும் முடிவு செய்தால் சரி என்று தான் மாநில தலைவரும் கூறி உள்ளார்.

பல ஊர்களில் ஆளுநர்களின் செயலை பார்க்கும் போது – அவர்களை உற்று பார்க்கும் நிலை உருவாகி உள்ளது – ஆளுனர்கள் தவறான சமிஞ்சையை காட்ட கூடாது.

கலைஞர் தந்த பயிற்சி வீன் போகவில்லை – ஸ்டாலின் செயல்பாட்டை கண்டு பிரமித்து போகிறேன்

“புலிக்கு பிறந்தது புலிதான்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *