திருச்சி இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அலுவலக திறப்பு விழா..!

 

திருச்சியில் பத்தாண்டுகளுக்கு மேல் பல சமூக சேவைகள், அடிமட்ட கல்வி கிடைக்காத குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த மாலை நேர இலவச வகுப்பு, கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவ மனைவியருக்கு உதவுதல், பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குதல் மற்றும் இது போன்று பல சேவைகளை செய்து வரும் .

திருச்சி இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அலுவலக திறப்பு விழா இன்று 25.10.2021 திங்கள் காலை 9 மணி அளவில் தலைமை தபால் நிலையம் அருகில் அமைந்துள்ள புனித பவுல் குருமடம் மூன்றாம் தளம் வளாகத்தில் துவங்கியது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கிராப்பட்டி வட்டார அதிபர் மற்றும் புனித தெரசா ஆலயம் பங்குத்தந்தை அருட்திரு J.J. லாரன்ஸ் அவர்கள் தலைமை தாங்கி புதிய அலுவலகத்தை அர்ச்சித்து புனிதப்படுத்தி துவக்கி வைத்தார்.

பத்தாம் ஆண்டின் துவக்கமாக நடைபெறும் இவ்விழாவில் தொண்டு நிறுவன நிர்வாகிகள் தலைவர் க. ரஞ்சித் குமார், செயலர் தா. ஜோசப் அமல்ராஜ், பொருளர் ஜோ. அற்புத சகாயராஜ், இணைச் செயலர் அ. அந்தோணி ஜெயகர் அவர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் பெரியோர்கள் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நிறுவன குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *