திருச்சி பெரகம்பி கிராமத்தில் சாலை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் பெரகம்பி கிராமத்தில் பெரகம்பி முதல் எதுமலை வரையிலான வனச்சாலை நான்கு வருடங்களுக்கும் மேலாக பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.இதனை சரி செய்து தர கோரி அந்த கிராம மக்கள் பல முறை திருச்சிகமாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரிகள்,
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் முதலமைச்சர் தனிபிரிவிற்கு மனு கொடுத்தும் கூட இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை.அதனால் திடீரென கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *