திருச்சியில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி

திருச்சியில் டெங்கு காய்ச்சல் கட்டுபாட்டில் இருக்கிறது – கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதால் தனிமனிதர் இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் வேதனை
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பொதிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சிவராசு துவக்கி வைத்தார். திருச்சி பொதிகை விற்பனை நிலையத்தின் நடப்பாண்டில் 350 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தற்போது வரை 42 பேர் டெங்கு பாதிப்பில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முக்கியமாக தூய நீர் தேங்க கூடிய இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி பகுதிகளில் பணியாளர்கள் 3 முறைகளாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தண்ணீர் தேங்கும் வீடு, கட்டிடங்கள் மற்றும் காலி மனைகளில் மழைநீரை தேக்கி வைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.அபராதம் விதிப்பது என்பது நோக்கமல்ல டெங்கு கொசுவை ஒழிப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கொரோனா அடுத்த அலை வராமல் இருக்க உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலின்படி 70 சதவீத தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் தற்போது திருச்சியில் 64 சதவீதம் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் 73% தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். புறநகர்ப்பகுதியில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மேலும் பொதுமக்களிடையே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவதால் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளி விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் உள்ளனர் என வேதனையுடன் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
பேட்டி: சிவராசு மாவட்ட ஆட்சியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *