தடகள வீரர் சுவராஜிக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் வரவேற்பு.

தேசிய அளவில் டில்லியில் அக்டோபர் 11-12ம் தேதி நடந்த தடகள போட்டியில் 18வயதுக்கான பிரிவில் நடந்த 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 48.59 நிமிடத்தில் 2வது இடத்தில் வெற்றிப் பதக்கம் பெற்றவரும், அக் 16.10.21 தேதி சென்னையில் ஆண்களுக்கான மாநில தடகள போட்டில் 400 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் பெற்றவருமான ஏ.சுவராஜிக்கு 18.10.21 காலை 10.00 மணியளவில் திருச்சி இரயில்வே நிலையத்தில் திருச்சி மாவட்ட தடகள சங்கம் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வரவேற்பு நடைபெற்றது.

வரவேற்பில் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி ராஜு, பொருளாளர் ரவிசங்கர், உதவி செயலாளர் கனகராஜ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பயிற்சியாளர் சீனிவாசன், மக்கள் சக்தி இயக்க பொருளாளர் கே.சி. நீலமேகம், ஆர்.கே.ராஜா, பள்ளி பயிற்சியாளர் உமாமகேஸ்வரன் மற்றும் பலர் கலந்துக் கொண்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *