மாநில தேர்தல் ஆணையம் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளாட்ச்சி தேர்தல் நடந்துள்ளது முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி

திருச்சி

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 50 ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு திருச்சி நீதி மன்றம் அருகே உள்ள எம். ஜி. ஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சரும் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி N நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் J சீனிவாசன், மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ” எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கம் 50 ஆண்டுகளாக வீரு நடை போடுகிறது.. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கினங்க இன்று திருச்சியில் 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.. எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் , உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டின் கோட்டை என்கிற வரை கழக தொண்டர்கள் செயலற்றுவோம் என்று கூறினார்..

மேலும் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த போது பெரிய வித்யாசம் இல்லை.
ஆனால் உடனே நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தவறான முறையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருக்கின்றார்கள்.

ஜெயக்குமார் தலைமையுடன் கலந்து ஆலோசித்து தான் சசிகலா குறித்த கருத்தை தெரிவித்து உள்ளார்” என்றார்
சசிகலா அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *