தஞ்சையில் நடைபெற்ற தடகள விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு

தஞ்சை மாவட்டத்தில் டெல்டா மாவட்டங்களுக்கிடையேயான தடகள விளையாட்டு போட்டி கடந்த 9 மற்றும் 10-ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தடகள விளையாட்டு வீரர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

இதில் திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் அகடமியிலிருந்து 40-க்கும் மேற்பட்ட தடகள விளையாட்டு வீரர்கள் பயிற்ச்சியாளர் வி.ஜி.முனியாண்டி தலைமையில், சுரேஷ்பாபு மற்றும் மேலாளர் மணி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் டெல்டா தடகள போட்டிகளில் பங்கேற்றனர். இப்போட்டியில் பல்வேறு பிரிவுகளில் திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் அகடமியை சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்றனர். அவையாவன;

1.கிஷோர் (under20) 1500 மீட்டர் ஓட்டத்தில் 2-ம் இடத்தையும், ரோகித்(under16)100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடத்தையும், 300 மீட்டர் ஓட்டத்தில் 2-ம் இடத்தையும், சிவதர்ஷனி(under16) குண்டு எறிதலில் முதலிடத்தையும், கலையரசி (under14) உயரம் தாண்டுதலில் 3-ம் இடத்தையும், அக்ஸயா(under12)50மீட்டரில் 3-ம் இடத்தையும், சிவரஞ்சனி (under12) பந்து எரிதலில் 3-ம் இடத்தையும், தமிழகன் (under12) பந்து எரிதலில் முதல் இடத்தையும் பெற்றுள்ளனர்.

தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் பொன்னாடை அனிவித்து பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் காவேரி ஸ்போர்ட்ஸ் அகடமியின் பயிற்ச்சியாளர்கள் வி.ஜெ.முனியாண்டி, சுரேஷ்பாபு, மணி, வழக்கறிஞர் ஆறுமுகம் செந்தில்குமார் தலைமை காவலர், மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ், பீர்மீரான், சிவசங்கர், அருளானந்தராஜ், மைக்கேல், பிரபு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் திரளான விளையாட்டு வீரர்கள் அவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *