SDPI கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் திருச்சி கிழக்குத் தொகுதி MLA இனிகோ இருதயராஜ் துவக்கி வைத்தார்

SDPI கட்சியின் தர்ஹா கிளையின் சார்பாக சீனிவாசன் மருத்துவக்கல்லுரி மருத்துவமனையும் SDPI கட்சியும் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று  தர்ஹா கிளை தலைவர் நூர்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளாராக கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்கள் கலந்து கொண்டு துவங்கி வைத்தார். மேலும் சிறப்பு முன்னிலையாக SDPI கட்சி தெற்கு மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் பைஜி அவர்களும், மாவட்ட செயலாளர் ஜமால் முகமது அவர்களும், கிழக்கு தொகுதி தலைவர் முஸ்தபா அவர்களும் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். மேலும் கிழக்கு தொகுதி நிர்வாகிகளும், தர்ஹா கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

ஏராளமான பொதுமக்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு தங்களது உடலை பரிசோதனை செய்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *