வேளாண் சட்டம் குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலையுடன் விவாதிக்க தயார் – வேல் முனுமுருகன் கன்

 

திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

மத்திய பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மக்கள் மீது மக்கள் விரோத சட்டங்களை திணித்து வருகிறது.

விவசாயிகள் டெல்லியில் மிகப்பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அவர்களை அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்து வரும் நிலையில் இதுவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவிக்கிறோம்.

போராட்டம் நடைபெற்ற இடத்தில் மத்திய அமைச்சரின் மகன் காரை ஏற்றி விபத்து ஏற்படுத்தி விவசாயிகளை கொலை செய்ததற்கு மத்திய அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை தொடர்ந்து விலை உயர்வை சந்தித்து வருகிறது. எந்தவொரு குடும்பத்தினரும் நிம்மதியாக வாழ முடியவில்லை. இது எதிர்காலத்தில் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைத்து விடும்.

வேளாண் படிப்புகளுக்கு படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், அரசு அனைவருக்கும் இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் படிப்புகளுக்கு அதிக கட்டணம் வசூல் செய்தால் அது குறித்து ரகசியமாக ஆடியோ அல்லது வீடியோ எடுத்து எனக்கு அனுப்பி புகார் தெரிவிக்கலாம்.

தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தர மறுப்பதும், நீட் தேர்வுக்கு தமிழக அரசு சட்டம் இயற்றி அனுப்பியுள்ளதை இதுவரை ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்வதையும்
வன்மையாக கண்டிக்கிறோம்.இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

இவை அனைத்தும் பாசிசத்தின் உச்சம்.

தமிழகத்தில் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும் படி யாரும் பேச வேண்டாம்.தமிழகம் முழுவதும் உள்ள சுங்க சாவடிகள் அகற்றப் பட வேண்டும்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் தர வேண்டும்.
ரவிச்சந்திரனுக்கு பிணை வழங்க வேண்டும்.திருச்சி ஈழத் தமிழர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்து அவர்களது உறவுகளுடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அகதிகளுக்கு தமிழக முதல்வர் வழங்கிய பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கியுள்ளதற்கு நன்றி.

சிறிய பிரச்சனைகளுக்காக, குற்றங்களுக்காக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவலர் உடற்பயிற்சி தேர்வில் தகுதி பெற்றும் கிட்டத்தட்ட 700 பேர் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டும் வழக்கின் காரணமாக பணி கிடைக்காதவர்களுக்கு பணி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வட நாட்டு காவலர்கள் தமிழர்கள் காவலர் பணிக்கு வர கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர்.

வேளாண் சட்டங்கள் குறித்து முழுமையாக தெரியாதவர்கள் தான் அதை எதிர்க்கிறார்கள் என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த வேல்முருகன்…

வேளாண் சட்டங்கள் குறித்து ஓரளவு தெரியும் என்ற வகையில், இச்சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது.
வேளாண் சட்டங்கள் குறித்து அண்ணாமலையுடன் நேரில் விவாதிக்க தயார். வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரானது.

ஜெயங்கொண்டத்தில் நிலக்கரி எடுக்க மக்கள் நிலங்களை தர தயாராக இருக்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு வடமாநிலங்களில் வழங்கப்படுவது போன்று உரிய இழப்பீடு, வேலைவாய்ப்பு என்.எல்.சி நிர்வாகம் தர தயாராக இல்லை என்பதே உண்மை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *