தமிழகத்தில் 22.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மா.சு

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர் :

மெகா தடுப்பூசி முகாம் கடந்த 5 வாரமாக நடைபெற்று வருகிறது – இன்று தமிழகத்தில் இதுவரை மொத்தம் 22.5லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

11.50 லட்சம் முதல் தடுப்பூசி

11 லட்சம் இரண்டாவது தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர்.

சென்னையில் இன்று முதல்வர் ஆய்வு செய்தார் – இதுவரை தடுப்பூசிகள் தமிழகத்தில் செலுத்தி கொண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 5கோடி 3லட்சத்து 58 ஆயிரம்.

அரசின் சார்பில் மட்டும் 5 கோடி 38 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

ஒன்றிய சுகாதாரத்துறை அலுவலர் தெளிவாகக் கூறியுள்ளார் மூன்றாவது அலை ஏற்படாது என்று யாரும் சொல்ல முடியாது என்று – அதனால் கோவில்களில் திறப்பு என்பதில் எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் மக்களுடைய உயிர் என்பது மிகவும் முக்கியம்.

தீபாவளி நெருங்கும் நிலையில் அதற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு கண்டிப்பாக பெற்றே தீரவேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு,கொள்கை,
அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

தேர்தல் அறிக்கையில் சொன்னதை விட சட்ட முன்வடிவாக மாற்றி நீட் விவகாரத்தில் அனுப்பி உள்ளோம்.

ஏகே ராஜன் தலைமையிலான அறிக்கையை ஏழு மொழிகளில் மொழிபெயர்த்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி உள்ளோம்.

நீட் தேர்விற்காக மாணவர்கள் தயாராவதில் எந்த தவறும் இல்லை,நீட் தேர்வு வராமல் போனால் சந்தோசம்,பரீட்சை எழுத தேவை இல்லை என்றால் பார்த்துக் கொள்ளலாம்.

பாரிவேந்தர் போன கூட்டனியில் இல்லை, – எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள் கூட்டத்தில் அவர் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *