இதோ வருமானவரி துறையின் புதிய இணையதளம் தொடங்கியுள்ளது.

பல்வேறு புதிய அம்சங்களுடன் வருமான வரித்துறையின் புதிய இணையதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

https://www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்து வந்த நிலையில், நேற்று முதல்  www.incometaxgov.in என்ற புதிய இணையதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த இணையத்தளம் பல புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே வருமான வரி செலுத்துவோர் உட்பட அனைவருக்கும் வருமான வரி தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒற்றை சாளர முறையில் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கம்.ஏற்கனவே ஆதார் கார்டு மற்றும்

பான் கார்டு இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாம் இந்த புதிய இணையதளம் மூலம் ஆதார் மற்றும் பான் கார்டு போன்றவை இணைத்துக் கொள்ளலாம்.

 

நம் கண்களை கதிர் வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது இயற்கை இண்டிகோ சாய சாறு

 

இது தவிர செல்பேசி வாயிலாக வருமான வரி தாக்கல் செய்யும் வசதியையும் வரும் 18ஆம் தேதி வருமான வரித்துறை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *