இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என காட்டப்பட்டப்பட்டதற்கு மன்னிப்புக்கோரியது கூகுள்.

கூகுள் தேடலில் (Google Search) இந்தியாவின் மோசமான மொழி எது என என்று தேடுதலில் பதிவிட்டால் அது கன்னடம் மொழி என காட்டியது. இந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கன்னட மொழி பேசும் மக்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 

மேலும் இது குறித்து கர்நாடக பண்பாட்டுத்துறை அமைச்சர் அரவிந்த் அவர்கள் கூறியதாவது, கன்னட மொழி சுமார் 2500 வருடங்கள் பழமை வாய்ந்தது. இதனை கூகுள் நிறுவனம் இழிவுபடுத்தியுள்ளது. இதற்காக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

 

புதிய சாதனையை படைத்த சீனாவின் ‘செயற்கை சூரியன்’ 

 

 

தற்போது இந்த விவகாரத்தை தொடர்ந்து கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் இதுகுறித்து கூகுள் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த தேடுதல் விவகாரம் கூகுள் தளத்தில் எதிர்பாராத விதமாக நடந்த ஒன்று. கன்னட மொழி அசிங்கமான மொழி என்பது கூகுளின் கருத்தில்லை.

இந்த விவகாரம் குறித்து கன்னட மொழியை தாய்மொழியாக கொண்டிருக்கும் மக்களிடம் கூகுள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. மேலும் இதற்கான உரிய நடவடிக்கையும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *