தமிழக அரசு கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

துணிவு, வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளவர்களுக்கு விருதுடன் ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், பதக்கமும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான ” கல்பனா சாவ்லா விருது ” ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் , சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது.

 

மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர்…

2021 – ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு , உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் , சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது htss://awards.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாகவோ அரசுச் செயலாளர் , பொதுத் துறை , தலைமைச் செயலகம் , சென்னை -600 009 அவர்களுக்கு 30.06.2021 – க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

 

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *