உலக தேனீ தினம்

உலக தேனீ தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று அனுசரிக்கப்படுகிறது.

தேனீ தின கொண்டாட்டங்கள் மனித நடவடிக்கைகளால் தேனீக்கள் போன்ற மகரந்தச் சேர்க்கையாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.

2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை மே 20 ஐ உலக தேனீ தினமாக நியமித்தது. நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியாகக் கருதப்படும் அன்டன் ஜானியா பிறந்த நாள் என்பதால் இந்த தேதி தேர்வு செய்யப்பட்டது.

World Bee Day theme 2021 is “Bee engaged: Build Back Better for Bees”

சுறுச்சுறுப்புக்கு உதாரணமாக சொல்லப்படும் தேனீக்கள் இயற்கையை சமநிலையாக வைத்துக்கொள்வதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அவை உற்பத்தி செய்யும் தேனானது பல விதங்களில் சித்த மருத்துவத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேனீக்கள் பெருங்கூட்டமாக வாழ்கின்றன. தேனீக்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறனைக் கொண்டதாகும். தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதாகும்.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *